Home
  News Archive
  Flag and Logo
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  KHC OSA Jaffna
  KHC OSA Aus - Sydney
  KHC OSA Aus - Victoria
  KHC OSA Canada
  KHC OSA Colombo
  KHC OSA Germany
  KHC OSA Norway
  KHC OSA UK
  Teachers' Day
  Prize Day 2008
  Messages
  Sign Guestbook
  View Guestbook
  About Us
  Contact Us
  FAQ
  Login to MyKHC
Prize Day - 2017
Prize Day - 2016
கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடி , இலச்சனை
வரலாறு

எமது கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடியானது 1940ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நிறங்களும் குறிக்கோளும்

கல்லூரியின் கொடியானது “சிவப்பு” நிறத்தையும், “வெள்ளை” நிறத்தையும் கலந்த நிறங்களாக கொண்டு துணியால் உருவாக்கப்பட்டது. இதில் சிவப்பு நிற கிடைமட்டகோடு “வெற்றியையும்”, வெள்ளை கிடைமட்டகோடு “தூய்மையையும்” குறிக்கின்றது.

Download Logo File
Download Png File
Download PSD File
இக்கொடியானது ஆயிரத்து ஆயிரத்தி இரு நூறு(1200mm) மில்லிமீற்றர் (மி.மீ) நீளமும், தொளாயிரத்துபத்து (910mm) மில்லிமீற்றர் (மி.மீ) அகலமும் கொண்டதாக அமையபெற்றுள்ளது.
 
இக்கொடி அமைப்பில் ஆறு (6) சிவப்பு நிற கிடைமட்டகோடுகளும், ஏழு (7) வெள்ளை நிற கிடைமட்டகோடுகளும், சேர்ந்து மொத்தம் பதின்மூன்று (13) சம கிடைமட்ட கோடுகளும் கொண்டிருக்கும். .
ஒவ்வொரு சிவப்பு நிற, வெள்ளை நிற கிடைமட்ட கோடுகளும் ஏழுபது (70mm) மில்லி மீற்றர் (மி.மீ) அகலமும், ஆயிரத்து நூற்றிருபது(1200mm) மில்லி மீற்றர்(மி.மீ) நீளமும் கொண்டதாக அமையபெற்றுள்ளது. இவ்விரு நிறங்களினால் அமைக்கப்பட்ட கல்லூரி கொடியின் மத்தியில் எமது கல்லூரியின் (இலச்சினை) சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். படம் - 1 இல் கீழ் காண்க
 
படம் - 1
குறிப்பு: “5” மடங்கு அளவு குறைத்து படங்கள் வரையப்பட்டுள்ளது.
 
படம் - 2
குறிப்பு: “10” மடங்கு அளவு குறைத்து வரையப்பட்டுள்ளது.
 
 
கொக்குவில் இந்துக் கல்லூரியின் ( இலச்சினை ) கேடயச் சின்னம்
எமது கல்லூரியின் ( இலச்சினை ) கேடயச் சின்னமானது . கேடயச் சின்னத்தின் உட்பாகத்தில் “ஐந்து” (5) சிறப்பு அடையாளங்களும் , கீழ்பாகத்தில் "கற்றதொழுகு" என்ற மகுட வாசகமும் கொண்டு அமைந்திருக்கும் .
  " ஓம் " இந்து சமயப்பண்பாட்டின் ஒழுக்கத்தையும் , பிரணவத்தையும் , குறிப்பதாகவும்
  " குத்துவிளக்கு " அறிவு வளர்வதையும் , குறிப்பாகவும்
  " சங்கு " வெண்மையையும் , தூய்மையையும் , குறிப்பதாகவும்
  " சக்கரம் " தர்மசிந்தனையையும் , குறிப்பாகவும்
  " தாமரை " செல்வத்தையும் , அழகையும் , உயர்வையும் , குறிப்பதாகவும்
  " கற்றதொழுகு " என்ற வாசகம் கற்க வேண்டியவற்றை ஐயந்திரிபுறக் கற்று , அதன்படி ஒழுக வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றன.
   
 
கேடயச் சின்னத்தின் ( இலச்சினை ) அளவு வரைபடங்கள்
 
" குத்துவிளக்கு "
அறிவு வளர்வதையும் , குறிப்பாகவும்
 
படம் 4
"சங்கு"
வெண்மையையும், தூய்மையையும் குறிப்பதாகவும்
 
படம் 6
"சக்கரம்"
தர்மசிந்தனையை குறிப்பதாகவும்
 
படம் 7
"தாமரை"
செல்வத்தையும், அழகையும், உயர்வையும்,குறிப்பதாகவும்
 
படம் 8
 
"ஓம்"
என்ற சைவு சமயப்பண்பாட்டின் ஒழுக்கத்தையும், பிரணவத்தையும், குறிப்பதாகவும்
 
படம் 5
 
 
படம் 8
 
 
"கற்றதொழுகு"
"கற்றதொழுகு" என்ற வாசகம் கற்க வேண்டியவற்றை ஐயந்திரிபுரறக் கற்று, அதன்படி ஒழுக வேண்டும் என்பதனை குறிக்கும்.
படம் 9
 
கேடயச் சின்னம்
படம் 10
கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடி(1200mm)மில்லிமீற்றர்(மி.மீ)நீளமும், தொளாயிரத்துபத்து(910mm) மில்லிமீற்றர்(மி.மீ) அகலமும் (1200mm X 910mm) கொண்டதாக அமைக்கும் போது கேடயச் சின்னம் (இலச்சினை), மற்றும் சிறப்படையாளங்களான ஓம், குத்துவிளக்கு, சங்கு, சக்கரம், தாமரை போன்றவைகள் இருக்கவேண்டிய பரிமாணங்கள் (அளவுகள்) பின்வருமாறு:
 
கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடி, கேடயச் சின்னம் (இலச்சினை) வரைவு அளவு.
கொடி நீளம் மில்லிமீற்றர் (மி மீ) 1200
கொடி அகலம் மில்லிமீற்றர் (மி மீ) 910
சிவப்பு, வெள்ளை நிற துண்டுகளின் அகலம் (சமஅளவு) 70
   
கேடயத்தின் அளவு
கேடயத்தின் அகலம் 400
கேடயத்தின் நீளம் 495
“கற்றதொழுகு” என்ற வாசகத்தின் தமிழ் எழுத்துரு(லதா)  
வாசகத்தின் சட்டப்பட்டியின் ("V") (மேல் வெளிப்புற)அகலம் 450
வாசகத்தின் சட்டப்பட்டியின் ("V") ((கீழ் வெளிப்புற)அகலம் 370
வாசகத்தின் சட்டப்பட்டியின் ("V") உயரம் 275
   
"ஓம்" சிறப்படையாளத்தின் அளவு மில்லிமீற்றர் (மி மீ)
“ஓ” எழுத்தின் (மேல்) அகலம் 160
“ஓ” எழுத்தின் (கீழ்) அகலம் 125
“ஓ” எழுத்தின் உயரம் 250
“ஓ” (மேல்) எழுத்தில் சுழி விட்டம் 22.5
“ஓ” (கீழ்) எழுத்தில் சுழி விட்டம் 20
   
“ம்” எழுத்தின் அளவு மில்லிமீற்றர் (மி மீ)
“ம்” எழுத்தின் அகலம் 20
“ம்” எழுத்தின் உயரம் 15
   
"குத்துவிளக்கு" சிறப்படையாளத்தின் அளவு மில்லிமீற்றர் (மி மீ)
"குத்துவிளக்கு" அகலம் (விளக்கு மேல் பகுதி) 70
"குத்துவிளக்கு" அகலம் (அடித்தளம்) 80
"குத்துவிளக்கு" உயரம் 190
   
"சங்கு" சிறப்படையாளத்தின் அளவு மில்லிமீற்றர் (மி மீ)
"சங்கு" அகலம் 60
"சங்கு" உயரம் 125
   
"சக்கரம்" சிறப்படையாளத்தின் அளவு மில்லிமீற்றர் (மி மீ)
"சக்கரம்" (வெளிப்புற)விட்டம் 72.5
"சக்கரம்" (உள்) விட்டம் (ஆறு கால்) 52.5
"சக்கரம்" மையம் புள்ளி விட்டம் 14.5
   
"தாமரை" சிறப்படையாளத்தின் அளவு மில்லிமீற்றர் (மி மீ)
"தாமரை"(பூ) அகலம் 100
“தாமரை” (பூ) உயரம் 72.5
 
 
குறிப்பு:
கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடி, கேடயச் சின்னம் (இலச்சினை), மற்றும் சிறப்படையாளங்களான ஓம், குத்துவிளக்கு, சங்கு, சக்கரம், தாமரை போன்றவைகளை, வரலாற்று புத்தக குறிப்புக்களை, அடிப்படை ஆதாரமாக கொண்டும், அமரர்.திருமதி.சுகிர்தலக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசனையும்,கருத்துரையும் கொண்டும் வரையப்பட்ட வரைபடங்களாகும். ஆதார குறிப்புக்களுக்கு நன்றிகள். படங்கள் 3-10, இவை யாவும் “5“ மடங்கு அளவு குறைத்து வரையப்பட்டுள்ளது. வரைவாளர்: பழைய மாணவன். தே.நடனகுமார்.
 
 New Alumni Members
 
Total Members : 1621
 Visitors on 2024-04-27
 
 
    ZZ   05
    US   46
 
 Battle of the Hindus
 Battle of the Hindus
 Battle of the Hindus
 Battle of the Hindus