| கண்ணீர

  Home
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  Sign Guestbook
  View Guestbook
  Teachers' Day
  News Archive
  Messages
  About Us
  Contact Us
  OSA
  Prize Day 2008
  FAQ
 
 
 
கண்ணீர் பூக்கள் !

[23 August 2015 01:25 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரி அலுவலக உத்தியோகத்தர் செல்வி சாந்தீஸ்வரி பசுபதி அவர்கள் 22-08௨015 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

எமது கல்லூரிச் சமூகத்தின் மனங்களில் நிறைந்து , நிர்வாக சுமையை என்றும் தன் தோளில் சுமந்து , அன்பினால் நம்மை அரவணைத்து , பண்பாய் பணிபுரிந்த சாந்தியக்காவே! உங்கள் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகின்றோம் !

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாரின் மீளாத்துயரில் நாமும் பங்குகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்குகிறோம்.     Detail>>>

நிழல்படத்தொகுப்பு!

[21 August 2015 10:20 GMT]
கல்லூரியில் நடைபெற்ற அண்மைய நிகழ்வுகளின் நிழல்படங்கள் நிழல்படதொகுப்பு பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
 நிழல்படதொகுப்புக்கு செல்ல இங்கே அளுத்தவும்    

Kokuvil Hindu College Best Cricketers Award - 2014

[10 August 2015 10:23 GMT]
Kokuvil Hindu College has released the Best Cricketers awards for 2014.     Detail>>>

பாராட்டு விழா!

[27 July 2015 12:45 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான உதவும் கரங்கள் திரு. ரகு தேவராஜா , திருமதி சுகன்யா தேவராஜா தம்பதியினரின் கெளரிவிப்பு நிகழ்வு நாளை செவ்வாய்கிழமை (28/07/2015) கல்லூரி தேவராஜா சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவின் தலைவராக எமது கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் திரு அ.பஞ்சலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிப்பார்.

கல்லூரி சமூகத்தினர் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.     Detail>>>

முத்தமிழ் விழா - 2015!

[27 July 2015 03:50 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழா - 2015 கலைநிகழ்வுகள் நாளை 28-07- 2015 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் தலைவராக கல்லூரி மாணவன் செல்வன் வி,விஷ்ணுஜன் பங்கேற்ப்பதோடு ,

நிகழ்வின் பிரதமவிருந்தினராக திரு.திருமதி.ரகு தேவராஜா (பழையமாணவர்கள் - கனடா) அவர்களும் ,

சிறப்பு விருந்தினராக திருமதி கெளரி முகுந்தன் (வட மாகாணம் உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ் மொழி)) அவர்களும் , திரு.சி. சிறிரஞ்சன் (பழையமாணவர் - ஐக்கிய ராச்சியம்) அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

முத்தமிழ்மன்றத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.     Detail>>>

கொக்குவில் இந்துவின் மைந்தர்கள் வரவேற்கப்பட்டனர்.

[26 July 2015 12:33 GMT]
கனடாவில் இருந்து கல்லூரிக்கு வருகை தந்திருந்த கல்லூரியின் வளர்ச்சிக்காய் அயராது உழைத்துவரும் கல்லூரியின் மைந்தர்கள் திரு. திருமதி ரகு சுகன்யா தம்பதியினர் கல்லூரி சமூகத்தினரால் வரவேற்கப்பட்டனர்.

அவர்கள் கடந்த வியாழக்கிழமை (23/07/2015 கல்லூரி காலைப் பிராத்தனையில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கியதோடு , கல்லூரியில் திறம்பட செயற்படும் மாணவர்களுக்கு பணப் பரிசில் மற்றும் வெற்றிக் கிண்ணம் போன்றவற்றை வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டது.     Detail>>>

கொக்குவில் இந்துவுக்கு சர்வதேச விருது!

[18 July 2015 12:55 GMT]
British Council இன் 2015 தொடக்கம் 2018 ஆம் ஆண்டுவரையான சிறந்த கலைத்திட்ட அமுலாக்கலுக்கான சர்வதேச விருதினை கொக்குவில் இந்துக் கல்லூரி வென்றது.

கடந்த ஜூலை 11 சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவில் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள், அதிபர் கொண்ட குழுவினர் சிறப்பு பரிசினை பெற்றுக்கொண்டனர்.     Detail>>>

மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்.

[16 July 2015 15:20 GMT]
வட மாகாணமட்ட 2015 விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் மிக சிறப்புற தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை நடந்த போட்டிகளில்

மாகாணமட்ட மேசைப்பந்தாட்ட போட்டியில் 15 வயதின் கீழ்ப்பட்ட - ஆண்கள் அணி , 15 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள் அணி இரண்டும் முதலாம் இடத்தையும்,

மாகாணமட்ட கரம் போட்டியில் 15 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள் அணி முதலாம் இடத்தையும், 19 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் ,15 வயதின் கீழ்ப்பட்ட ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும்


மாகாணமட்ட சதுரங்கம் போட்டியில் 19 வயதின் கீழ்ப்பட்ட ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும் , 15 வயதின் கீழ் ஆண்கள் அணி நான்காம் இடத்தையும் ,

மாகாணமட்ட கூடைப்பந்தாட்டம் போட்டியில் 19 வயதின் கீழ்ப்பட்ட ஆண்கள் அணி நான்காம் இடத்தையும் பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.     Detail>>>

More News...
கொக்குவில் இந்துவின் மைந்தர்கள் வரவேற்கப்பட்டனர்.
கொக்குவில் இந்துவுக்கு சர்வதேச விருது!
மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்.
தேசிய மட்ட, மாகாண மட்ட தமிழ் தினப்போட்டிகள்!
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் (2014) சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் விபரம்.
கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் - பங்குனி !
Annual Inter House Athletic Meet 2015
இனிய தைத்திருநாள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
GCE (A/L) - 2014 Results - Ten students got 3As!!
கண்ணீர் பூக்கள் !
More news archive >>
 New Alumni Members
 
Total Members : 1546
 Memorial Volume
 Visitors on 2015-09-03
 
 
    ZZ   10
    AU   01
    GB   02
    US   15
 
 Battle of the Hindus
 Battle of the Hindus
 Battle of the Hindus
 Battle of the Hindus